Important Links

Aedu-Gallery

News

Updates from the Charity Commission

Latest feed and updates

அல்லலுறும் ஒரு பிள்ளையைப் பராமரியுங்கள்

இலங்கையில் வடக்கு, கிழக்குப் பிராந்தியங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை உள்நாட்டுப் போராலும் 2004 ஆழிப்பேரலையாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட உயிர்ச் சேதத்தினால், பல பிள்ளைகள் பெற்றோரை இழந்து ஆதரவின்றி அல்லலுறுகின்றனர்.  உயிர் பிழைத்தவர்களிற் பலர் தொழில் வாய்ப்பின்றி, தம் பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமற் பரிதவிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களது முழுமையான வளர்ச்சியைப் பேணவும் பராமரிப்பு செயற்பணி வடக்கு, கிழக்குப் பிராந்தியங்களில் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. 

2009இல் ஏடு ஐக்கிய இராய்ச்சியம் ஆரம்பமானது. இலங்கையின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பராமரிப்புச் செயற்பணிக்கு பராமரிப்பாளர்களை வழங்கி வருகிறோம். ஆனால், தேவை மிகுந்த பிள்ளைகளின் தொகை கூடிக்கொண்டே வருகின்றது. நாம் ஒன்றிணைந்தால் அவர்களது அல்லல்களைத் தவிர்க்கலாம். 

 

பராமரிப்பு செயற்பணி அமைப்பின் சிறப்பம்சங்கள்:
  • ஆதரவற்ற பிள்ளைகளை, அவர்ளைப் பராமரிக்கும் குடும்பத்தின் அன்பான, பாதுகாப்பான அரவணைப்பில் வளர்த்தல்.
  • வறுமையால் வாடும் பிள்ளைகளைத் தாபரித்து, அவர்களை அவர்களது குடும்பத்தின் ஆதரவில் வளர்த்தல்
  • வறுமையால் பாடசாலைக் கல்வி நிறுத்தப்படாமற் பூர்த்திசெய்தல்
  • தத்தம் குடும்பத்தினரின் பாதுகாப்பில், துஷ்பிரயோகங்களுக்கு உட்படாமற் பாதுகாத்தல்
  • திடமான தன்னம்பிக்கை உள்ள சமூகங்களை வளர்த்தல்

 

ஐக்கிய இராய்ச்சிய ஏடு அமைப்பினால் தேர்வுசெய்யப்பட்ட சமூகசேவை அமைப்புக்களின் சிக்கனமான திறமை வாய்ந்த நிருவாகமே இப் பணித்திட்டத்தின் வெற்றிக்குக் காரணமாகும்.
  • கடமை உணர்வுள்ள, தன்னார்வத் தொண்டரணி நிருவாகம் செய்கிறது
  • உதவிப்பணம் சரியாகப் பயன்படுத்தப்படுவதையும், பிள்ளைகளின் முழுமையான முன்னேற்றத் தையும் கண்காணிக்க, அவர்களுடைய இல்லங்களிலும் பாடசாலைகளிலும் ஒழுங்கான பரிசீலனை நடத்தப்படுகிறது.
  • பராமரிப்பவர்க்கும், பராமரிக்கப்படுபவர்க்கும் இடையே தனிப்பட்ட உறவை வளர்த்து, அப் பிள்ளைகளின் முன்னேற்றம் பற்றி ஒழுங்கான தகவல் வழங்கப்படுகின்றது.

 

தயவுசெய்து ஒரு பிள்ளையைப் பராமரியுங்கள்

மாதாந்த பராமரிப்புச் செலவு:

  • இளம்பிள்ளைக்கு:       £15
  • பதின்மவயதினருக்கு:    £20

 

அல்லது,

இத் தொகையின் பகுதியையோ, பன்மடங ;கையோ - தங்களுக்கு இயலுமான தொகையை அன்பளிப்பாகவோ அல்லது வங்கிமூலம் நிலையாணையாகவோவழங்கவும். இதற்கான படிவத்தை  நிரப்பி பின்வரும் விலாசத்துக்கு அனுப்பவும்.

AEDU U.K.  1A Hardy Avenue, South Ruislip, Middlesex, HA4 6SU.

இயற்கையாலும் போராலும் பாதிக்கப்பட்ட குற்றமற்ற பிள்ளைகளின் வாழ்வை ஒன்றிணைந்து மேம்படுத்துவோம்.

 

நன்றி

ஏடு ஐ.இ.

Aedu Gallery

  • aedu-800x600-global-uk
  • aedu-800x600-international
  • aedu-800x600-kilinochchi-image
  • aedu-800x600-kilinochchi-north-sri-lanka
  • aedu-800x600-kilinochchi-sri-lanka
  • aedu-uk-800x600-global
  • aedu-uk-800x600-international-sri-lanka
  • aedu-uk-800x600-international
  • aedu-uk-800x600-kilinochchi-image
  • aedu-uk-800x600-kilinochchi-north-sri-lanka-image
  • aedu-uk-800x600-kilinochchi-north-sri-lanka
  • aedu-uk-800x600-kilinochchi-sri-lanka
  • aedu-uk-800x600-org